திருநெல்வேலியில் ரயர் ஒட்டும் கடை தீக்கிரை

யாழ். திருநெல்வேலி சந்தியில் ரயர் ஒட்டும் கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கடையின் பெரும்பகுதி தீக்கிரையாகியுள்ளதோடு பெறுமதி வாய்ந்த பொருட்களும் எரிந்துள்ளன.

நேற்றிரவு கடை உரிமையாளர் கடையை பூட்டிவிட்டுச் சென்ற பின்னர் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சென்று பார்த்தபோது கடையின் பெரும்பாலான பகுதி எரிந்து நாசமாகியுள்ளமை தெரியவந்துள்ளது. அத்தோடு, சுமார் 5 லட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களும் எரிந்து சாம்பாலாகியுள்ளன.

மின் ஒழுக்கில் ஏற்பட்ட கோளாறே இத் தீ விபத்திற்கு காரணமென தெரிவிக்கப்படுவதோடு, கடை உரிமையாளரின் முறைப்பாட்டிற்கமைய கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *