மே 24-இல் போப் பிரான்சிஸ் – டொனால்டு டிரம்ப் சந்திப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மத்திய கிழக்கு நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போப் பிரான்சிஸ்-ஐ மே மாதம் 24-ந்தேதி சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸ்-ஐ சந்தித்த பின் பிரசல்ஸ்-இல் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் கலந்து கொண்டு பின் சிசிலியில் நடைபெறும் ஏழு நாடுகள் கலந்து கொள்ளும் மாநாட்டில் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்கிறார்.

அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் போப் பிரான்சிஸ் இடையேயான சந்திப்பு அப்போஸ்தலிக் அரண்மனையில் காலை 8.30 மணிக்கு துவங்கும் என வாடிகன் தெரிவித்துள்ளது. வழக்கமாக போப் பிரான்சிஸ் மற்றவர்களை சந்திப்பதை விட சற்று முன்னரே டிரம்ப்-ஐ சந்திக்கிறார்.

1984 ஆம் ஆண்டு முதல் வாஷிங்டன் மற்றும் வாடிகன் இடையே நல்லுறவு இருந்து வருகிறது. அமெரிக்காவில் மொத்தம் 21 சதவிகிதம் பேர் கத்தோலிக் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *