ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மேலும் விஸ்தரிப்பதற்கான திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது எனவும், அதன் முதற்கட்டமாக தற்போதுள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அந்தக் கட்சியின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக புதிய அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொள்வதற்கு தேர்தல் ஆணையகத்துக்கு விண்ணப்பித்திருக்கும் கட்சிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று அந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் தம்முடன் இணைய விருப்பம் தெரிவிக்கும் புதிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் பொருத்தமான பதவிகள் வழங்கப்படவுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.