கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல
”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக பலர் கூறுகிறார்கள். என்னை அப்படி சொல்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்கிறேன், நான் மலையகத்தை சேர்ந்த இளைஞன். கருப்பையா கங்கானியின் கொள்ளுப் பேரன்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தலவாக்கலை நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்
சிலர் நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்த முனைகின்றனர். நான் பதவிக்காக ஆசைப்படுபவன் இல்லை. பதவிகள் நம்மை தேடி வர வேண்டும். பதவிகளை தேடி நாம் போகக் கூடாது. காங்கிரஸில் இருந்து வெளியேறினால் இனி மீண்டும் உள்ளே வரமுடியாது. எல்லோரும் வந்துபோக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பஸ் தரிப்பிடம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.