கருணா தான் முன்னிலையாகாத காரணத்தை சி.ஐ.டி.க்கு அறிவிப்பு
விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க முன்னிலையாக காரணத்தை அறிவித்துள்ளார்.
சுகவீனம் காரணமாக சி.ஐ.டி.யில் ஆஜராக முடியாதென தனது சட்டத்தரணி ஊடாக விநாயகமூர்த்தி முரளிதரன் சி.ஐ.டி.க்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கருணா அம்மானிடம் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.