Saturday , June 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் இன்று (04.06.2020) மாலை 5 மணிக்கு கையொப்பமிட்டார்.

கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் (சி.எல்.எப்) நடைபெற்ற இதற்கான நிகழ்வில் இ.தொ.கா.வின் பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜா, உப தலைவர் செந்தில் தொண்டமான், பொருளாளர் மருதபாண்டி ரமேஷ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜதுரை உட்பட இ.தொ.கா.வின் உயர்மட்ட பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஐந்து வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv