பயங்கரவாததிற்கு இடமளிக்க முடியாது – கமால்
பயங்கரவாதத்தை பரப்புவதற்கு எந்த ஒரு குழுவினருக்கோ அல்லது தனிநபர்களுக்கோ இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், குற்றவாளிகளுக்கு அவர்களின் சமூக அந்தஸ்து, அரசியல் சிறப்புரிமை, இன, மத பேதம் பாராமல் தண்டனை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பெற்றுக் கொடுக்கப்படும். சுமார் 270 க்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்கும் 500க்கும் அதிகமானனோரின் படுகாயத்திற்கும் காரணமான உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை, திட்டமிட்டு, நிதியுதவியளித்து, ஆதரவளித்த அனைத்து குற்றவாளிகளையும் அரசாங்கம் வெளிக்கொண்டுவரும் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.