கிளிநொச்சியில் இளம் கர்ப்பிணி பெண்ணொருவர் திடீர் பலி!
கிளிநொச்சி கல்மடு பகுதியில் இளம் கர்ப்பிணி ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சம்புக்குளம் கல்மடு பகுதியை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நேற்று காலையிலிருந்து கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டபோதும் அதனை பொருட்படுத்தவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பெண் நேற்று பிற்பகல் திடீரென மயங்கிவிழுந்ததை அடுத்து தர்மபுரம் வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்த நிலையில் மேலதிக சிகிற்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
எனினும் அங்கு சிகிற்சை பலனளிக்காத நிலையில் குறித்த இளம் பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பெண்ணின் கருவானது கர்பப்பைக்கு வெளியே தங்கியதனால் அவருக்கு ஏற்பட்ட திடீர் இரத்தப்போக்கே யுவதியின் உயிரிழப்புக்கு காரணம் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயனுள்ள இணைப்புகள் இங்கே




