கொரோனா வைரஸ் ஆபத்து நிலை உச்சம்… உலக சுகாதார நிறுவனம் அதிரடி தகவல்!
கொரோனோ வைரஸ் உலகலாவிய அச்சுறுத்தல் எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை அதியுச்ச மட்டத்துக்கு உயர்த்தியுள்ளது.
கொரோனோ வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் சமீபத்திய நாட்களில் பாதிக்கப்பட்டுள்ள புதிய நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையிலும் ஆபத்து எச்சரிக்கை நிலை உச்ச மட்டத்துக்கு உயர்த்தப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை மிகவும் கவலைக்குரியது என ஜெனீவாவில் இன்று செய்தியாளர்களிடம் டெட்ரோஸ் கூறினார்.
ஆரம்பத்திலேயே தொற்றைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டவரைத் தன்மைப்படுத்தி, சிறப்பாகக் கவனித்தால் இந்தத் வைரஸை கட்டுக்குள் வைத்திருக்கு வாய்ப்பு உள்ளது.
அண்டார்டிகாவைத் தவிர ஒவ்வொரு கண்டத்திலும் இந்த வைரஸ் பெருகியுள்ளது. நாடுகளின் அரசாங்கங்கள் மக்கள் கூட்டங்களைத் தடுக்க முயல்கின்றன. வணிக நிறுவனங்கள் தொழிலாளர்களை மட்டுப்படுத்துகின்றன.
1,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றும் அனைத்து நிகழ்வுகளும் மார்ச் 15 வரை இடைநிறுத்தப்படுவதாக சுவிட்சர்லாந்து இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்த வைரஸால் 2,800-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உலகளவில் 83,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோசமான பாதிப்புக்குள்ளான நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முடக்கப்பட்டுள்ளனர்.
ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 50 நாடுகளில் கொரோனோ பாதிப்புக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன எனவும் உலக சுகாதா அமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கொரோனோ வைரஸை எதிர்கொள்வதற்கான ஆபிரிக்க நாடுகளின் தயார் நிலை குறித்து அவர் கவலை வெளியிட்டார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
வவுனியாவில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்!
-
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்!
-
தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!
-
கொரோனாவால் இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
-
இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி!