பிரான்சில் ஒரே நாளில் 41 பேர் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சி தகவல்
பிரான்சில் 24 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 18இலிருந்து 41ஆக உயர்ந்துள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வியாழன் இரவு மற்றும் வெள்ளி காலை அறிவிக்கப்பட்ட 23 புதிய நோயாளிகளில் இரண்டு பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் சமீபத்தில் எகிப்துக்கு சுற்றுலா சென்ற ஒரு குழுவில் இருந்துள்ளார்கள்.
கொரோனா தாக்கியவர்களில், உயிரிழந்த இருவரில் ஒருவர் வட பிரான்சைச் சேர்ந்த ஆசிரியர், மற்றவர் வயதான சீன சுற்றுலாப்பயணி.
கொரோனா தாக்கியதாக புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள நோயாளிகள் அனைவருமே, ஏற்கனவே கொரோனா தாக்கியவர்களின் குடும்பத்தினர் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்கள்தான் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Oise பகுதியில்தான் அதிகம் பேர் இதுபோல் கூட்டமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். Oiseஇல்தான் 60 வயதான தொழில்நுட்ப ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.
தற்போதைய கணக்குப்படி, Oiseஇல் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உயிரிழந்த அந்த தொழில்நுட்ப ஆசிரியரிடம் பயின்ற மாணவர்களுக்கும் நோய் தொற்றியிருக்கலாம் என்பதால், நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
அதேபோல் Haut-Savoieஇல் சமீபத்தில் இத்தாலியின் Lombardyயிலிருந்து திரும்பிய ஒரு 64 வயது நபருடன் தொடர்புடைய நால்வருக்கும் கொரோனா தொற்றியுள்ளது.
Lyon, Strasbourg, Montpellier மற்றும் Nice ஆகிய இடங்களிலும், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நோயாளிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உட்பட தலைவர்கள், ஒரு கொள்ளை நோய் வர இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஒரு அறிவித்தல் எமது இணையதளத்தில் பிரான்ஸ் செய்திகளுக்கு மட்டும் தனி பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளோம் அதை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
எமது youtube சேனல்லில் இன்றே இணைத்திடுங்கள்
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்!
-
கொரோனாவால் ஈரான் விமான சேவைகளை நிறுத்த இந்தியா முடிவு !
-
இத்தாலிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான கொரோனா வைரஸ் அறிக்கை
-
பாரிஸின் கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் பாரிய தீ விபத்து
-
கொரோனா வைரஸ் உச்சம் – ஜப்பான், தென்கொரியா நாட்டவர்களுக்கு தடை விதித்த இந்தியா
-
கொரோனா வைரஸ் ஆபத்து நிலை உச்சம்… உலக சுகாதார நிறுவனம் அதிரடி தகவல்!
-
வவுனியாவில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்!
-
இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி!
-
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்!
-
தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!
-
கொரோனாவால் இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
-
மனித உரிமை மீறல், மற்றுமொரு விசாரணை – ஐ.நா கொடுத்த அதிர்ச்சி!