“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீரைத் துடிக்க சர்வதேச சமூத்திடமும், இலங்கை அரசிடமும் தன்னாலான அழுத்தங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கும்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட மக்கள் மாவட்ட செயலத்துக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக் களத்துக்கு நேற்று நேரில் சென்று ஆதரவைத் தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இந்த அரசு பதில் கூறவேண்டும். அதற்கு ஒரு சரியான பதிலைத் தரவேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.