Friday , November 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஐ.தே.கவில் வெடிக்கும் சர்ச்சை !

ஐ.தே.கவில் வெடிக்கும் சர்ச்சை !

ஐ.தே.கவில் வெடிக்கும் சர்ச்சை !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இரகசியமாக சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என அமைச்சர் சுஜீவ சேனசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள அவர், இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கடந்த 26ம் திகதி இரவு சந்திப்பொன்று நடந்துள்ளது. இந்த சந்திப்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கலந்துக்கொண்டிருந்தனர் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்க ஜனாதிபதியிடம் ஆதரவை கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே, அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான யோசனையை முன்வைப்பது தொடர்பில் கட்சியின் முக்கியமான அங்கத்தவர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிகியிருந்தன.

அவ்வாறு இது தரப்பினர்களுக்கும் இடையில் இரகசிய பேச்சுவாரத்தை இடம்பெற்றிருந்தால் அது ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஆதரவாளர்களுக்கும் இழைக்கும் துரோகச் செயலாகும்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு அல்லது நாடாளுமன்றக் குழுவின் அனுமதியின்றி அந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து உங்களின் நிலைபாட்டை அறிந்துக்கொள்ள விரும்புகிறேன்.

அவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெற்றிருக்குமாக இருந்தால் அந்த பேச்சுவாரத்தையில் பங்கு பற்றியிருந்த தரப்பினருக்கு எதிராக கட்சியின் விதிமுறைகளுக்கு அமைய எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சர்களான அஜித் பி.பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவுசெய்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையினையும் விமர்சித்ததன் காரணமாகவே இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விளக்கமளிப்பதற்காக இருவருக்கும் 9ம் திகதிவரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv