உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 134 மில்லியன் ரூபா வங்கிப் பணம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சந்தேக நபர்களின் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் இனங்காணப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.