முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சம்மேளன நிர்வாகத்தெரிவுகள்
கடந்த 18.03.2017 சனிக்கிழமை அன்று நாடளாவிய ரீதியில் மாவட்ட இளைஞர் சம்மேள நிர்வாக தெரிவுகள் இடம்மெற்றன.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னைய தலைவர் கி.தரணீதரன் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் மங்கள விளக்கேற்றல்,அதனைத்தொடர்ந்து தலமையுரை இடம்பெற்றது,
பின்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிக்குமார் அவர்களால் கடந்த ஆண்டு பொதுக்கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது .
அதனைத்தொடர்ந்து மாவட்ட உதவிப்பணிப்பாளர் k.சரோஜா அவர்களால் தேசிய இளைஞர் சேவை மன்ற செயற்பாடுகள் தொடர்பாக கருத்துரை ஆற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து பழைய நிர்வகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாக தெரிவுகள் இடம்பெற்றன.
அதனடிப்படையில் பல்வேறு தெரிவுகளுக்கு மத்தியில் வாக்கு அடிப்படையில் 70% பெரும்பாண்மை ஆதரவுடன் மாந்தை கிழக்கு இளைஞர் சம்மேளன தலைவர் க.சுஜாந் 2017ம் ஆண்டுக்கான மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
பொருளாளராக ச.ஜனகன் தெரிவு செய்யப்பட்டதோடு அமைப்பாளராக பி.யசோதரன் தெரிவு செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைசார் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டதோடு இனிதே தெரிவுகள் நிறைவுபெற்றன.