காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி வடக்கு, கிழக்கில் தொடர்கின்றன அறவழிப் போராட்டங்கள்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 5 மாவட்டங்களில் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டம் தீர்வு கிடைக்காமல் தொடர்கின்றன.
வடக்கின் 4 மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலை மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலிறுத்தியே அவர்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
“எமக்கு உறுதியான தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. எம்மை வீதியில் விட்டு வேடிக்கை பார்ப்பதை விடுத்து எமக்குத் தீர்வு பெற்றுத் தர வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 29 நாட்களாகப் போராடி வருகின்றனர்.
வவுனியாவில் 25 நாட்களாகப் போராட்டம் நடத்தப்படுகின்றது. தகரக் கொட்டகை அமைத்து அதில் தங்கியிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் போராட்டம் நடத்தப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 13 நாட்களாகத் தொடர்கின்றது. .
யாழ்ப்பாணத்தில், வடமராட்சி கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் நேற்று அவர்களைச் சந்திந்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் 16 நாட்களாகத் தொடர்கின்றது.