Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையில் முதலீடு செய்ய தென்கொரிய விருப்பம்

இலங்கையில் முதலீடு செய்ய தென்கொரிய விருப்பம்

இலங்கையில் முதலீடு செய்ய தென்கொரிய விருப்பம்

ஆய்வு தொடர்பான அபிவிருத்தி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தென்கொரியா தயாராக உள்ளதாக அந்நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் யுன் பியுங் சே தெரிவித்துள்ளார்.’

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,

இலங்கை மெகா பொலிஸ் திட்டத்தில் முதலீடு மேற்கொள்வதற்கு தென்கொரியா தயாராக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கு இந்த விஜயம் பெரிதும் உதவியுள்ளது.

தேசிய நல்லிணக்கம், சமாதானம் ஆகியவற்றுக்காக சமகால இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத் திட்டங்களுக்கு தென்கொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் பவுசர்கள் உள்ளிட்ட ஏனையவற்றை வழங்குவதற்கு தென்கொரிய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும் கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Visit Our Sites:

Tamilnewsstar.com

Tamilaruvi.news

Tamilaruvi.tv

Tamilaruvimedia.com

Tamil24news7.com

Tamilpriyam.com

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …