Friday , August 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மட்டக்களப்பில் 4 வயது சிறுவன் அடித்துப் படுகொலை! – சந்தேகத்தில் வளர்ப்புத் தாய் கைது

மட்டக்களப்பில் 4 வயது சிறுவன் அடித்துப் படுகொலை! – சந்தேகத்தில் வளர்ப்புத் தாய் கைது

மட்டக்களப்பில் 4 வயது சிறுவன் அடித்துப் படுகொலை! – சந்தேகத்தில் வளர்ப்புத் தாய் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாப் பிரதேசத்தில் நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி, நாவற்குடா மாதர் வீதியை அண்டி அமைந்துள்ள வீடொன்றிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அச்சிறுவனின் வளர்ப்புத் தாய் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

அச்சிறுவனை அடித்தார் எனக் கூறப்படும் அவனது வளர்ப்புத் தாயே (வயது – 50) அச்சிறுவனை அடிகாயங்களுடன் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். இருப்பினும், அச்சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட வேளையில் உயிரிழந்து காணப்பட்டார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸாருக்கு வைத்தியசாலை அதிகாரிகள் தகவல் வழங்கினர். இதனையடுத்து, குறித்த வளர்ப்புத் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து பொல்லுகள் சிலவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் தலை மற்றும் முகத்தில் அடிகாயங்கள் காணப்படுகின்றன என்று பொலிஸாரின் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸாரும் மட்டக்களப்பு குற்றத் தடவியல் பிரிவுப் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …