Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வெறுப்புணர்வை தூண்டியோருக்கு எதிராக நடவடிக்கை அவசியம் : பிரிட்டன் வலியுறுத்து

வெறுப்புணர்வை தூண்டியோருக்கு எதிராக நடவடிக்கை அவசியம் : பிரிட்டன் வலியுறுத்து

இன, மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை அரசிடம் பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக பெருமளவானோர் அச்சமடைந்துள்ளனர்.

இந் நிலையில், இன மற்றும் மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில், சமூக வலைத்தளங்கள் உள்ளடங்காளாக செயற்பட்ட அனைவருக்கும் எதிராக அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

வைபர் மீதான தடை நீக்கப்பட்டு அது மீண்டும் செயற்படுவது நல்லது. பேஸ்புக் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முழுமையாக விரைவில் மீள இயங்கச் செய்ய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரும் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, நவீன இலங்கையின் வெற்றிகரமான சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …