ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து மஹிந்த, பஸிலுடன் பேசவில்லை

2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, மஹிந்த ராஜபக்ஷவுடனோ, பஸில் ராஜபக்ஷவுடனோ பேசவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது கலந்துரையாடுவது, மிகவும் முற்கூட்டிய நடவடிக்கையாக அமையும். அதற்கான நேரம்வரும் போது, மஹிந்த ராஜபக்ஷ ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருவார்.

ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் போது எந்தவொரு அரசியல் கட்சியும், நாட்டின் அரசியல் சூழலைக் கவனத்தில் எடுக்கும் என்று நான் நினைக்கிறேன்.

குறித்த கட்சி அல்லது குழுவின் சார்பில் மிகப் பொருத்தமானவர் தான் போட்டியிடுவார். அதுபோல, இலங்கையின் இறைமை மீது நம்பிக்கை கொண்டுள்ள எமது மக்கள், தமது ஜனாதிபதி வேட்பாளராக மிக பொருத்தமான ஒருவரைத் தான் முடிவு செய்வார்கள்” என்றும் கூறியுள்ளார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →