Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பூந­க­ரி­யில் நள்­ளி­ரவு விபத்­தில் ஒரு­வர் சாவு!!

பூந­க­ரி­யில் நள்­ளி­ரவு விபத்­தில் ஒரு­வர் சாவு!!

பூந­கரி, செல்­வி­பு­ரம் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இரவு இடம்­பெற்ற வாகன விபத்­தில் குடும்­பத் தலை­வர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். விபத்­துக்­குக் கார­ண­மா­னது எனக் குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் வாக­னத்­தின் சாரதி கைது செய்­யப்­பட்­டார்.

சார­தி­யைக் காப்­பாற்­று­வ­தற்­காக விபத்­துக்­குக் கார­ணம் உயி­ரி­ழந்­த­வர் பய­ணித்த உந்­து­ருளி (மோட்­டார் சைக்­கிள்) மாட்­டு­டன் மோதுண்­டதே என்று பொலி­ஸார் ஏமாற்ற முற்­ப­டு­கின்­ற­ னர் எனச் சந்­தே­கம்­கொண்ட உற­வி­னர்­கள் சட­லத்­தைப் பொறுப்­பேற்­க­மாட்­டோம் என்று கூறிப் போராட்­டம் நடத்த முற்­பட்­ட­தால் கிளி­நொச்சி மாவட்­டப் பொது மருத்­து­வ­ம­னை­யில் நேற்­றுப் பகல் குழப்ப நிலை ஏற்­பட்­டது.

எனி­னும் நேற்று மதி­யம் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி நடத்­திய விசா­ர­ணை­யில் வாக­னம் மோதியே இறப்பு சம்­ப­வித்­தது என்று ஒரு­வர் சாட்­சி­யம் தெரி­வித்­ததை அடுத்து சார­தி­யைக் கைது செய்­யப் பொலி­ஸார் நட­வ­டிக்கை எடுத்­த­னர். இத­னால் நிலமை கட்­டுக்­குள் வந்­தது.

பூந­க­ரி­யைச் சேர்ந்த ஒரு பிள்­ளை­யின் தந்­தை­யான சிங்­க­ராசா கேதீஸ்­வ­ரன் (வயது – 32) என்­ப­வரே விபத்­தில் உயி­ரி­ழந்­தார். மோட்­டார் சைக்­கி­ளில் பரந்­தன் நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருந்­த­போது பரந்­தன் நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருந்த யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த பிர­பல வர்த்­தக நிறு­வ­னம் ஒன்­றுக்­குச் சொந்­த­மான பார­ஊர்­தி­யு­டன் (லொறி) மோதி விபத்­துக்­குள்­ளா­னார் என்று கூறப்­ப­டு­கின்­றது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …