Monday , December 23 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / துணிச்சல் மிகுந்த ஆண்டாக அமையட்டும்.!

துணிச்சல் மிகுந்த ஆண்டாக அமையட்டும்.!

மலரும் புத்­தாண்டு சிறந்த நோக்­கங்­களும் அடையப் பெறும், துணிச்சல் மிகுந்த ஆண்­டாக அமை­ய­வேண்­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

புத்­தாண்­டினை முன்­னிட்டு அவர்­வி­டுத்­துள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அச்­செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நீண்ட கால மக்கள் எதிர்­பார்ப்­புக்­களை வெற்றி கொண்டு நாம் பெற்றுக் கொண்ட சமூக, அர­சியல் சுதந்­தி­ரத்தை மிகவும் அர்த்­த­முள்­ள­தாக மாற்­றி­ய­மைக்கும் முக்­கிய பணியை மீண்டும் மீண்டும் நினை­வு­ப­டுத்­திய நிலை­யி­லேயே 2018 ஆம் ஆண்டு பிறக்­கி­றது.

நல்­லாட்சி அர­சாங்கம் அமைக்­கப்­ப­டும்­போது நாட்டில் பாரிய சமூக, பொரு­ளா­தார, அர­சியல் வீழ்ச்சி காணப்­பட்­ட­துடன், கடு­மை­யான கஷ்­டங்­க­ளுக்கு மத்­தி­யில்­கூட நிலை­பே­றான அபி­வி­ருத்திச் செயற்­பாடு ஊடாக பொரு­ளா­தார ஸ்திரத்­தன்­மையை நோக்கிச் செல்ல நாம் நட­வ­டிக்கை மேற்­கொண்டோம்.

கடந்த காலப்­ப­கு­தியில் மக்­க­ளுக்கு சமூக, அர­சியல், மானிட சுதந்­தி­ரத்தைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கும், சர்­வ­தே­ச­ரீ­தி­யாக எமது நாடு தொடர்­பாகக் காணப்­பட்ட எதிர்­ம­றை­யான மனப்­பாங்­கு­களை மாற்­றி­ய­மைத்து நட்­பு­ணர்­வு­மிக்க சூழ­லொன்றைக் கட்­டி­யெ­ழுப்­பவும் முக்­கிய கவ­னத்­தினை செலுத்தி நட­வ­டிக்கை மேற்­கொண்டோம். தற்­போது எமக்கு அவற்றின் சிறந்த பிர­தி­ப­லன்­களைப் பெற்றுக் கொள்ள முடி­யு­மான நிலைமை காணப்­ப­டு­கி­றது.

ஜன­நா­யக, தார்­மீகப் பண்­புகள் கொண்ட முன்­னேற்­ற­க­ர­மான நாடாக முன்­னோக்கிச் செல்­வ­தற்­காக எமது அர­சாங்கம் இது வரைக்கும் மேற்­கொண்ட வேலைத்­திட்­டத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய அனை­வ­ருக்கும் நன்றி தெரி­விப்­ப­துடன், மிகுந்த பலத்­துடன் இந்த வரு­டத்­திலும் தொடர்ந்து முன்­னோக்கிச் செல்ல நீங்கள் எம்மோடு இணைந்திருப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம். 2018 ஆம் ஆண்டு அனைத்து சிறந்த நோக்கங்களும் அடையப் பெறும், துணிச்சல் மிகுந்த ஆண்டாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv