சிங்கப்பூர் தலைமை அமைச்சர் லீ சின்லுத் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். சிங்கப்பூருக்கும், இலங்கைக்கும் இடையிலான கட்டுப்பாடுகள் இல்லாத வர்த்தக உடன்படிக்கை ஒன்று அப்போது கைச்சாத்திடப்படவுள்ளது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பையேற்று அவரின் பயணம் இடம்பெறவுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரை சிங்கப்பூர் தலைமை அமைச்சர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
நல்லாட்சி அரசு அமைய பெற்றது முதல் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்யொன்றை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
முன்னாள் அயலுறவுத்துறை அமைச்சரும் தற்போதைய நிதி மற்றும் ஊடக அமைச்சருமான மங்கள சமரவீர, பன்னாட்டு வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இது குறித்த பேச்சுகளை முன்னெடுத்திருந்தனர்.