முல்லைத்தீவில் ஒலுமடு உப அலுவலகம் மற்றும் சித்த ஆயுள்வேத மருத்துவமனை என்பன மீள இயங்க ஆரம்பித்துள்ளன.
ஒலுமடுப் பகுதியில் உள்ள புதுக்குடியிருப்புப் பிரதேச சபையின் உப அலுவலகம் மற்றும் சித்த ஆயுள்வேத மருத்துவமனை, நூலகம் என்பன கடந்த காலங்களில் சிறப்பாகச் செயற்பட்ட போதும், கடந்த 2009ஆம் ஆண்டு போர் காரணமாக சேதமடைந்தன.
மீள்குடியமர்வின் பின்னர் குறித்த பிரதேசம் இராணுவ வசமானது. குறித்த பகுதியை விடுவிக்குமாறு பல்வேறு தரப்புக்களும் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நல்லாட்சி அரசால் காணி விடுவிக்கப்பட்டது.
மருத்துவமனை இயங்குவதால் பெருமளவானோர் தமது மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும் என பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.