Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மாகாண சபை­யில் இடம்­பெ­று­வது குடும்ப சண்­டையே

மாகாண சபை­யில் இடம்­பெ­று­வது குடும்ப சண்­டையே

மாகாண சபை உறுப்­பி­னர்­கள் கூறு­கின்ற ஆலோ­ச­னை­களை அரச அதி­கா­ரி­கள் கேட்­க­வேண்­டும். நாம் சபை­யில் போடு­கின்ற சண்டை குடும்­பச் சண்டையே அதற்­காக அதி­கா­ரி­கள் உறுப்­பி­னர்­க­ளின் கருத்­துக்­களை உதா­சீ­னம் செய்­வதை தவிர்க்க வேண்­டும் என்று அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் வரவு செல­வுத் திட்­டத்­தின் அமைச்­சுக்­கள் மீதான விவா­தம் நேற்­றை­ய­தி­னம் மாகாண சபை­யில் இடம்­பெற்­றது. இந்த அமர்­வின் ஆரம்­பத்­தி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­தார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது:

மாகாண சபை­யில் நாம் மக்­க­ளின் பல்­வேறு பிரச்­சி­னை­கள் தொடர்­பில் ஆராய்ந்து வரு­கின்­றோம். எமது உறுப்­பி­னர்­கள் மக்­க­ளி­டம் நேர­டி­யா­கச் சென்று அவர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் கேட்­ட­றிந்து தீர்த்து வரு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் உறுப்பினர்கள் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் அதி­கா­ரி­க­ளி­டம் விளக்­கம் கேட்­கும் போதோ அல்­லது அறி­வு­றுத்­தல்­களை வழங்­கும்போது அதி­கா­ரி­கள் அத­னை உதா­சீ­னம் செய்­வது ஏற்­கக் கூடி­யது அல்ல.

நாம் போடு­கின்ற சண்­டைக்­காக உறுப்­பி­னர்­களை அதி­கா­ரி­கள் புறம் தள்­ளு­வதை ஏற்­க­மு­டி­யாது. அதி­கா­ரி­க­ளி­டம் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் ஏதா­வது கூறி­னால் அதனை அர­சி­யல் தலை­யீடு எனக் கார­ணம் இன்றி குறை­கூ­றா­தீர்­கள். அதி­கா­ரி­கள் சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு ஒத்­து­ழைக்க வேண்­டும். அதி­கா­ரி­க­ளும் உறுப்­பி­னர்­க­ளும் ஒற்­று­மை­யாக செயற்­பட வேண்­டும் – என்­றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …