புகையிரத சேவை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் நீடித்தால் புகையிரத பருவகால சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு தனியார் பேருந்துகளில் இலவச போக்குவரத்து சேவையை வழங்க தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணி பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் இடம்பெறுமானால் புகையிரத பருவகால சீட்டுக்களை வைத்திருக்கும் மாணவர்களுக்கு தனியார் பேருந்துகளில் இலவசமாகச் செல்ல சந்தர்ப்பம் அளிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று முன்தினம் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.
புகையிரத சீட்டினை வைத்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இச் சலுகை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.