Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / குளத்­தில் இருந்து ஆணின் சட­லம் மீட்பு!

குளத்­தில் இருந்து ஆணின் சட­லம் மீட்பு!

முல்­லைத்­தீவு மாங்­கு­ளம், மதகு வைத்த குளத்­தி­லி­ருந்து ஆண் ஒரு­வர் சட­ல­மாக நேற்று நண்­ப­கல் மீட்­கப்­பட்­டார்.
அதே இடத்­தைச் சேர்ந்த 2 பிள்­ளை­க­ளின் தந்­தை­யான காளி­யண்­ணன் சூரி­ய­கு­மார் (வயது – 39)என்­ப­வரே இவ்­வாறு சட­ல­மாக மீட்­கப்­பட்­ட­வ­ரா­வார். சூரி­ய­கு­மாரை நீண்ட நேர­மாக் காண­வில்லை என அவ­ரது உற­வி­னர்­கள் தேடி­னர்.

வீட்­டின் அரு­கில் உள்ள மதகு வைத்த குளக் கரை­யோ­ர­மாக அவ­ரின் துவிச்­சக்­கர வண்­டி­யும், அவர் அணிந்­தி­ருந்த பாத­ணி­க­ளும் காணப்­பட்­டன. இதை அடுத்து குளத்­தி­னுள் இறங்­கித் தேடிப் பார்த்­த­னர்.நீரி­னுள் தாண்­டி­ருந்த சூரி­ய­கு­மார் நீரின் மேல் கொண்­டு­வ­ரப்­பட்­டார்.

பொலி­ஸார் வர­வ­ழைக்­கப்­பட்­ட­னர். சூரி­ய­கு­மார் உயி­ரு­டன் இருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தில் பொலி­ஸார் அவரை மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லைக்­குத் தூக்­கிச் சென்­ற­னர். எனி­னும் அவர் உயி­ரி­ழந்­துள்­ளார் என வைத்­தி­ய­சா­லை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் விசா­ர­ணையை மேற்­கொண்­ட­னர். உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னைக்­காக சட­லம் மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …