Sunday , August 24 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை கொல்ல நடந்த முயற்சி முறியடிப்பு

பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை கொல்ல நடந்த முயற்சி முறியடிப்பு

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் தெரசா மே. இவரை கொல்வதற்காக டவுனிங் தெருவில் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த நவம்பர் 28ந்தேதி தீவிரவாத ஒழிப்பு படையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் வடக்கு லண்டனை சேர்ந்த ஜகரியா ரெஹ்மான் (வயது 20) மற்றும் தென்கிழக்கு பிர்மிங்காம் நகரை சேர்ந்த முகமது அகீப் இம்ரான் (வயது 21) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

அவர்கள் வெஸ்ட்மின்ஸ்டெர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிரிட்டன் பிரதமர் தெரசாவை கொல்ல நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது என ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் 9 சதி திட்டங்கள் முறியடிக்கப்பட்டு உள்ளன என்று தெரசாவின் செய்தி தொடர்பு அதிகாரி நேற்று கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv