கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் கோயிலின் பின்புற வீதியில் உள்ள புத்தர் சிலையை அகற்றுமாறு பலராலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றபோதும் இன்றுவரை அகற்றப்படவில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது. பதிலாக இரணைமடுக் குளத்துக்கு அருகிலிருந்த சிலையையே அகற்றியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இரணைமடுக் குளத்தின் அருகில் இருந்த சிறிய இராணுவமுகாம் அகற்றப்பட்ட பின்னர் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலையும் அகற்றப்பட்டுள்ளது. இரணைமடுக் குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தில் போரின் பின்னர் இராணுவத்தினர் சிலை அமைத்தனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 3ஆயிரம் மில்லியன் நிதியுதவியில் குளம் சீரமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் குளத்தின் அபிவிருத்திக்கு இடையூறாக புத்தர் கோவிலிருந்த காரணத்தால் அது இராணுவத்திரால் அகற்றப்பட்டது.
ஆனால் பலரும் எதிர்பார்த்துக் கோரிக்கை விடுத்துள்ள கோயி லுக்குப் பின்புறமுள்ள புத்தர் சிலை, விகாரை அகற்றப்படவில்லை என்று கவலை தெரி விக்கின்றனர்.