தெற்கு அந்தமான் தீவுப் பகுதியில் – இலங்கையிலிருந்து ஆயிரத்து 300 கிலோ மீற்றர் தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நேற்று மாலை நிலைகொண்டிருந்தது.
இது எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் வங்காள விரிகுடா வழியாக இந்தியாவின் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம், மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை காணப்படும். கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
இந்தக் காலநிலை, மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு பாதுகாப்பானது அல்ல என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.பிரேம்லால் தெரிவித்தார்.
தெற்கு அந்தமான் தீவுகளில் உள்ள வலுவான குறைந்த காற்றழுத்தம் தீவிரமடைந்து வருகின்றது. இது எதிர்வரும் மூன்று தினங்களுள் இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா, வட தமிழகக் கடற்கரையை நோக்கிச் செல்லும். இலங்கை மற்றும் இந்தியக் கரையோரப் பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும்.