Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பிற­ருக்கு உதவ வேண்­டு­மென்று நினைப்­ப­வர்­க­ளி­டம் வசதி இல்லை

பிற­ருக்கு உதவ வேண்­டு­மென்று நினைப்­ப­வர்­க­ளி­டம் வசதி இல்லை

‘‘உதவி செய்ய வேண்­டும் என்று நினைப்­ப­வர்­க­ளி­டம் வசதி இருப்­ப­தில்லை. வசதி இருப்­ப­வர்­கள் உதவி செய்­வ­தில்லை. இவ்­வா­றான சமூ­கத்­தி­லேயே நாம் வாழ்ந்­து­ கொண்டு இருக்­கி­றோம்.’’

இவ்­வாறு வடக்கு மாகாண மக ளிர் விவகார அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் தெரி­வித்­தார்.

பன்­னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்­பு­ணர்வு தின நிகழ்வு யாழ்ப்­பாண நகர விடு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யில் அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

யாழ்ப்­பாண விழிப்­பு­ணர்­வற் றோர் சங்­கம் 40 வரு­ட­மாக சேவையை வழங்­கிக்­கொண்டு வரு­கின்­றது. இந்­தச் சங்­கத்­துக்­குப் பல நிறு­வ­னங்­கள் உத­வி­களை வழங்­கி­வ­ரு­கின்­றன.

பிறப்­பிலே மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் ஆனோரை விட போர் கார­ண­மாக மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் ஆன பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் யாழ்ப்­பா­ணத்­தில் வாழ்ந்து வரு­கின்­ற­னர்.

இவர்­க­ளுக்­கான வாழ்­வா­தார உத­வித்­திட்­டங்­கள் மற்­றும் கல்வி என்ற வகை­யில் இலங்கை அரசு பொது­வே­லைத் திட்­டம் ஒன்றை முன்­னெ­டுக்­க ­வேண்­டிய தேவைப்­பாடு காணப்­ப­டு­கின்­றது.

போர் முடி­வ­டைந்து 8 வரு­டங்­கள் கடந்­தும் இலங்கை அரசு இவர்­க­ளுக்­காக வாழ்­வா­தார பொது வேலை­த்திட்­டங்­கள் எது­வும் முன்­னெ­டுக்­கப்­ப­டாமை கவ­லைக்­கு­ரி­யது – என்­றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …