மட்டக்களப்பு – நாவலடியில் இன்று காலை கரவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் சிக்கியிருந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக் கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் அச்சநிலையொன்று ஏற்பட்டுள்ளது.
இதுபோன்று கடந்த சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் பெருமளவான பாம்புகள் மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்ததால் அங்கு பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதிகளவிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது