யாழ். குடா நாட்டில் வலி வடக்கு – வயாவிளான் பகுதியில் படையினர் வசமிருந்த 29 ஏக்கர் காணி 27 வருடங்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டது.
வயாவிளான் ஜே 205 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஒட்டகபுலம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் சென். அன்ரனிஸ் தேவாலயம் உட்பட மக்களின் 29 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.
பொதுமக்களின் காணியை அவர்களுக்குக் கையளிக்கும் இன்றைய நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத்ததளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாரச்சி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் வீடுகள் உடைந்த நிலையில் காணப்படுவதுடன் காணிகளை இனங்காணமுடியாத முடியாத நிலையில் புளி, இப்பிலிப்பிலி என பெரிய மரங்கள், பற்றைகளால் சூளப்பட்டுள்ளது. அத்துடன் இங்குள்ள பாடசாலை தேவாலயம் என்பனவும் சேதமடைந்து காணப்படுகின்து.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த மே மாதம் வரையான காலப்பகுதியில் படையினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2021ஆம் ஆண்டிற்குள் வடக்கில் சுமார் 3,400 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் 2018 இல் 4.54 ஏக்கரும், 2019 இல் 1.06 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளன.