Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சாரதிகளுக்கு ஒரு முக்கிய கோரிக்கை.!

சாரதிகளுக்கு ஒரு முக்கிய கோரிக்கை.!

இலங்கைக்கு தென்மேற்குக் கடலில் உண்டாகியிருக்கும் காற்றழுத்தம் கடும் தாழமுக்கமாக மாறியிருக்கிறது.

கொழும்புக்கு சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இத்தாழமுக்கம் மேலும் வலுப்பெற்று இலங்கையைக் கடந்து அரேபியக் கடல் பிராந்தியத்தை அடையவிருக்கிறது.

இதனால், இன்று முழுவதும் தற்போதைய சீரற்ற காலநிலையே தொடரும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களை 60 கிலோமீற்றர் வேகத்தில் செலுத்துமாறு சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், வாகனங்களுக்கிடையில் சுமார் 50 மீற்றர் அளவில் இடைவெளியை பேணுமாறு அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாகனத்தின் முன்பக்க விளக்கை எரிய விட்டு வாகனத்தை செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …