கடும் மழையின் எதிரொலியாக ஹட்டன், கெசல்கமுவ ஆற்றின் நீரேந்துப் பகுதிகள் நிரம்பி வழிவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவு அதிகரித்து வருவதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பொகவந்தலாவ எஸ்டேட், நோர்வூட் ஆகிய பகுதிகளில் வீடுகள் சில வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் வாழும் சுமார் 68 குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தேங்கும் நீரின் அளவு அதிகரித்து வருவதையடுத்து கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
இதனால், கொத்மலை ஆற்றின் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.