உலகின் குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடிய கார் கருதப்படும் நேனோ கார் வாகனங்களின் அடுத்த தயாரிப்பாக மின்சார நேனோ கார் இந்திய சந்தைக்கு இன்று அறிமுகப்படுத்திவைக்கப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஹதராபாத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசின் சிறப்பு தீர்மானத்தின் படி எதிர்வரும் 2030ம் ஆண்டளவில் எரிபொருளில் இயங்கும் அனைத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய கார் ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் சுமார் 200 கிலோ மீற்றர் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 400 கார் சந்தைக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய கார் விலை இந்திய ரூபாயில் 5 இலட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது.