Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வடக்கில் அரச பேருந்து இயக்குனர்கள் வேலை நிறுத்தம்

வடக்கில் அரச பேருந்து இயக்குனர்கள் வேலை நிறுத்தம்

அரச பேருந்து சேவைகள் அனைத்தும் வடக்கு மாகாணத்தில் இன்று காலை தொடக்கம் ஸதம்பிதம் அடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை முதல் ஆரம்பித்தனர்.

வட பிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடன் இடமாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் பேருந்துகள் எதுவும் இல்லை. அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாதிருக்க பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …