Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பிய ஈழ அகதிகள்

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பிய ஈழ அகதிகள்

தமிழகத்தின் தூத்துக்குடி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஒன்பது பேர் இராமேசுவரத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு தப்பிச்சென்றது திங்கள்கிழமை தெரியவந்துள்ளது.

இதுகுறித்து உளவுத் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த முகாம்களில் உள்ள சிலர் தங்களது உறவினர்களைப் பார்க்க இராமேசுவரத்தில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு சென்று விடுகின்றனர்.

இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி இலங்கை தமிழர்கள் முகாமில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிரியந்தி (32), பரமநாதன் (37), மற்றொரு பரமநாதன் (41) உள்ளிட்ட 4 பேர், 5 குழந்தைகள் என 9 பேர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து படகு மூலம் இலங்கை சென்றுள்ளனர் .

இதையடுத்து, 9 பேரையும் இலங்கைக்கு அழைத்துச் சென்ற படகு, தரகர்கள் குறித்து உளவுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …