சிவனொளிபாதமலை பருவகாலம் அடுத்த மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு மஸ்கெலியாவிலிருந்து சிவனொளிபாதமலை வரை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் தீடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
நுவரெலியா மாவட்ட வாகன பரிசோதகர்களுடன் மஸ்கெலியா போக்குவரத்து பொலிஸாரும் இணைந்து நேற்றைய தினம் தொடக்கம் தீடீர் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிவனொலிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகளுக்கு பாதுகாப்பான சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் 50 மேற்பட்ட வாகனங்கள் சோதனைக்கு உட்பட்டுத்தப்பட்டன.
இதன்போது, குறைபாடுகளுடன் இருந்த 10 வாகனங்களை எதிர்வரும் 10 நாட்களுக்குள் திருத்தியமைத்து பொலிஸ் நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்திய பின் சேவையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனுமதியின்றி முச்சக்கரவண்டியில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக பாகங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது