வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
விசேடமாக மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 75 மில்லி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.