Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்கள்..

துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்கள்..

துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை இரண்டு வாலிபர்கள் கற்பழித்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் வட மாநிலங்களில் மிகவும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், காசியாபாத் நகரில் 28 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், கடந்த திங்கட்கிழமை பணி முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இத்தனைக்கும், அவருடன் பணிபுரியும் அவரை வீட்டின் அருகிலேயே இறக்கி விட்டு சென்றுவிட்டார்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 2 வாலிபர்கள், துப்பாக்கியை காட்டி அப்பெண்ணை மிரட்டி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி, அருகிலிருக்கும் காட்டுப்பகுதிக்கு சென்று, அப்பெண்ணை மாறி மாறி கற்பழித்துள்ளனர். அதன்பின் அங்கிருந்து ஓடி விட்டனர்.

அந்நிலையில், போலீசாரின் அவசர உதவி எண் 100ஐ அழைத்து அப்பெண் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து, உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் அந்த வாலிபர்களை பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் காசியாபாத் நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய …