மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளின் பொருட்டு நாளை யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 9 1/2 மணி நேர மின்சார தடை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சார தடை அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் பொன்னாலை, காரைநகர், காரைநகர் இராணுவ கடற்படை முகாம், காரைநகர் ஜெற்றி, வடலியடைப்பு, தொல்புரம், சத்தியகாடு, கள்ள வேம்படி, சுழிபுரம், பத்தானை கேணியடி ஆகிய பகுதிகளிலும்,
மன்னார் மாவட்டத்தின் சிறுநாவற்குளம், நாகதாழ்வு, திருக்கேதீஸ்வரம், மாந்தை மேற்கு ஆகிய பகுதிகளிலும், வவுனியா மாவட்டத்தின் சாளம்பைக்குளம் பகுதியிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.