நடிகர் ரஜினி மற்றும் கமல் ஹாசன் ஆகியோருக்கு அடுத்தபடியாக டுவிட்டரில் பின்தொடரும் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் என்ற பெருமையை சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு டுவிட்டரில் 4 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர். சமீபமாக டுவிட்டர் பதிவுகளை அதிரடியாக வெளியிடும் கமல்ஹாசனுக்கு 3 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், 4 மில்லியன் பின்தொடர்பவர்கள் பின்தொடர்கின்றமைக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், தனது புதிய ஒளிப்படங்களையும், புதிய திரைப்படம் பற்றிய தகவல்களையும் அவ்வப்போது டுவிட்டர் மூலம் பகிர்ந்துகொள்கின்ற நிலையில், அவரை பின்தொடரும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.