Tuesday , October 14 2025
Home / சினிமா செய்திகள் / சன்னி லியோனும்.. வளர்ப்பு மகளும்.

சன்னி லியோனும்.. வளர்ப்பு மகளும்.

கவர்ச்சிப் புயல் சன்னி லியோனை பற்றிய வித்தியாசமான விஷயம் இது. அவர் தனது வளர்ப்பு மகள் நிஷாவுடன் ஜாலியாக முதல்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட சந்தோஷத்தில் இருக்கிறார். அந்த அனுபவம் குறித்து சன்னி லியோனிடம் பேசுவோம்:

மகளுடன் உங்களின் வெளிநாட்டுச் சுற்றுலா எப்படி இருந்தது?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் முடிந்த அளவு ஜாலியாக பொழுதைக் கழிக்கவேண்டும் என்பது எங்கள் திட்டம். அங்கு எனது கணவர் டேனியல் வெப்பரின் குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக்கழித்தோம். அவரது குடும்பத்தினர் அப்போதுதான் நிஷாவை முதல்முறையாகப் பார்த்தனர். அது எங்கள் எல்லோருக்குமே சந்தோஷமான அனுபவமாக அமைந்தது.

நிஷாவின் முதல் சர்வதேசப் பயணம் என்றவகையில் உங்களுக்கும் வெப்பருக்கும் இது ரொம்ப ஸ்பெஷலானதாக இருந்திருக்கும் அல்லவா?

நிஷாவுடன் இருக்கும் ஒவ்வொரு நாளுமே எங்களுக்கு ஸ்பெஷல்தான். நாங்கள் அவளின் முதல் பிறந்தநாளை டிஸ்னிலாண்டில் கொண்டாடினோம். அவள் ரொம்ப குட்டிக் குழந்தை என்பதால், வளர்ந்தபின் அவளுக்கு அது குறித்து அதிக ஞாபகமிருக்காது. ஆனால், அவளின் முதல் பிறந்தநாளை நாங்கள் எப்படிக் கொண்டாடினோம் என்பதைக் காட்டுவதற்கு எங்களிடம் படங்கள் இருக்கின்றன. பின்னாளில் அவற்றைப் பார்க்கும்போது அவள் சந்தோஷப்படுவாள். அதுபோல் அவள் நிறைய சந்தோஷப்படவேண்டும் என்பதற்காக நானும், வெப்பரும் நிஷாவுடன் புதுப்புது இடங்களுக்குச் செல்ல விரும்புகிறோம்.

நீங்கள் நடித்த ஆணுறை விளம்பரங்கள் சமீபத்தில் கடும் சர்ச்சைக்குள்ளானதே?

பிரபலமானவர்களைக் குறிவைத்துத் தாக்குவது இன்று எளிதாக இருக்கிறது. நம்மைப் பற்றி மோசமாகப் பேசப்படும் வார்த்தைகளை, அதுவும் உண்மையில்லாத விஷயங்களை நம்மால் ரசிக்க முடியாது. நான் யார் என்பதும், வாழ்வில் எனது இலக்குகள் என்ன என்பதும் எனக்குத் தெரியும். எனக்கு ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான குடும்பம் இருக்கிறது. அதுதான் எனக்கு முக்கியம். என்னை மட்டந்தட்டும் சர்ச்சைகளை நான் ஒரு பொருட்டாகக் கருதுவதே இல்லை.

அதேநேரம் கொச்சி, காத்மாண்டு போன்ற புதிய இடங்களில் உங்களுக்கு ரசிகர்களிடமிருந்து அபார வரவேற்புக் கிட்டுகிறது. அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

என்னைப் பொறுத்தவரை, உலகமெங்கும் மக்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது அங்கு மக்கள் மாறுபட்டு இருக்கிறார்கள். உலகின் எந்த மூலையிலும் ரசிகர்களைச் சந்திப்பதை நான் விரும்புகிறேன், அதில் மகிழ்கிறேன்.

நீங்கள் அர்பாஸ் கானுடன் இணைந்து நடிக்கும் படம் பற்றி…?

அர்பாஸுடன் இணைந்து நடிப்பது மிக நல்ல அனுபவம். அவ்வளவு நல்ல நண்பர் அவர். அர்பாஸிடம் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …