ஈரான் -ஈராக் எல்லையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுலமெனியா என்ற இடத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது.
துபாய், அபுதாபி, ஐக்கிய அரபு நாடுகளில் பல இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
பயங்கர நிலநடுக்கத்தால் ஈராபில், தூகூக், அல்பஜ்ஜா ஆகிய இடங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது.
வடக்கு ஈராக் நகரான சுலைமெனியாவில், வீடுகள் குலுங்கியதால், அதிர்ச்சி அடைந்த மக்கள் தெருக்களில் பீதி அடைந்து ஓடும் காட்சிகள் அந்நாட்டு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது.
300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது,