பிக்பாஸ் வெற்றியாளரான ஆரவ் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.அதில் கலந்து கொள்ளும்படி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். ஓவியாவையும் அழைத்து இருந்தார்.
அதை ஏற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கணேஷ் வெங்கட்ராம், ஹரீஷ், காயத்ரி ரகுராம், ரைஸா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனால் ஆரவ் பிறந்த நாள் கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியது.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதத்தில் ஓவியாவும் திடீரென்று வருகை தந்தார். அதனால் ஆரவ் பிறந்த நாள் விழா கோலாகலமானது.
பழைய சம்பவங்களை மறந்து அனைவருடனும் கலகலப்பாக பேசிய ஓவியா, ஒளிப்படங்களும் எடுத்துக் கொண்டார். அதனால் பிக்பாஸ் நண்பர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.
இந்தப் படங்களை கணேஷ் வெங்கட்ராம் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆரவ்வுடன் ஓவியா ‘செல்பி’யும் எடுத்துக் கொண்டார்.
நடந்தவற்றை மறந்து ஆரவ் பிறந்தநாள் விழாவில் ஓவியா கலந்து கொண்டு அவரை வாழ்த்தியதை அவரது ரசிகர்கள் இணையதளங்களில் பாராட்டியுள்ளனர்.