Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியாவில், கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலத்தை இன்று (27) பிற்பகல் பொலிசார் மீட்டுள்ளனர்.

வவுனியா – உக்கிளாங்குளம், பிள்ளையார் கோவில் வீதியில் வசித்து வந்த தியாகலிங்கம் ரகுவரன் (26) என்ற இளைஞன் கடந்த மூன்று தினங்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். இது குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் அளிக்கப்பட்டிருந்தது.

வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பினால் மனமுடைந்த நிலையில் ரகுவரன் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் ரகுவரனின் வீட்டுக் கிணற்றிலிருந்தே அவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது தற்கொலையா அல்லது கொலையா என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …