காதல் தோல்வியில் இருந்த ஓவியாவிற்கு புதிய பாட்னெர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஓவியாவின் காதலை ஆரவ் நிராகரித்துள்ள நிலையில், தனக்கு பாட்னெர் ஒருவர் தற்போது இருக்கின்றார் என நடிகை, பிக் பொஸ் புகழ் ஓவியா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அன்புடன் ஓவியா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “தீபாவளி என்று நான் கொண்டாடுவது இல்லை. தினம் தினம் எனக்கு தீபாவளி தான். எனக்கு புஸ்வானம் தான் மிகவும் பிடித்த பட்டாசு. எப்பொழுது நினைக்கிறேனோ அப்போது தீபாவளி கொண்டாடுவேன்.

வருமானத்திற்கு ஒரு வேலை செய்ய வேண்டும் என்பதற்காக மொடலிங் செய்தேன். பின்னர் களவாணி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிகையானேன். இப்போ எனக்கு ஒரு பாட்னெராக என்னுடைய நாய் இருக்கு

தல, தளபதி இரண்டு பேருமே மாஸ். அவர்கள் இரண்டு பேரையும் எனக்கு பிடிக்கும். அத்துடன் நடிகர்கள் அனைவரையும் எனக்கு பிடிக்கும். தல நடிக்கும் திரைப்படத்தில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி வேலைக்காரியாகக் கூட நடிப்பேன்” என ஓவியா தெரிவித்துள்ளார்.

Loading…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *