தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஓவியா.
இவர் அந்நிகழ்ச்சியை தொடர்ந்து ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்திலும் விஷ்ணு விஷால் நடிக்கும் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
மேலும், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் அண்மையில் படமாக்கப்பட்டுள்ளது.
அந்த பாடலுக்கு விஷ்ணு மற்றும் ஓவியா நடனம் ஆடியுள்ளனர்.
பாடல் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை விஷ்ணு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.
மேலும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.