ஜூலியை விட காயத்ரி நல்லவர் என்றும் காயத்ரி நன்றாக கவனித்துக்கொள்ளக்கூடியவர் என்றும் பிக் பொஸ் புகழ் நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட, அவரிடம் நீங்கள் ஒரு நாளை செலவிட விரும்பினால் காயத்ரி, ஜூலி இவர்களில் யாருடன் செலவிடுவீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதலளித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜூலி எப்பவும் ஒரே மாதுரியாகவும் அசமந்த போக்குடனும் இருப்பார் என்றும் நன்றாக மனம் விட்டு பேசக்கூடியவர் என்றால் அது காயத்ரி தான் என்றும் அவர் கூறினார்.
மேலும், எதுவாக இருந்தாலும் காயத்ரி நேரடியாக சொல்லக்கூடியவர் என்றும் ஜூலி அவ்வாறு இல்லை என்றும் ஜூலியை கேலி செய்து ஓவியா கருத்து தெரிவித்திருந்தார்.
பிக் பொஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை ஓவியா என்பதும் குறிப்பிடத்தக்கது.