பிரபல நடிகை த்ரிஷா, எப்போதும் சீரோ சைஸ் ஹீரோயின் தான். ஆனாலும் அவர் விஜய் சேதுபதியுடன் நடித்து வரும் 96 படத்தின் பிளாஷ் பேக்கில் பள்ளி மாணவியாக நடிக்கிறார்.
இதற்காக 30 வயதை கடந்த த்ரிஷா உடல் இளைத்துள்ளார்.
முன்பு தான் உடல் இளைத்த படத்தை வெளியிட்ட ரசிகர்கள் மீது கோபப்பட்ட த்ரிஷா, இப்போது தானே வெளியிட்டிருக்கிறார்.
தற்போது கர்ஜனை படத்தில் ஆக்ஷ்ன் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னும் சில படங்களில் சோலோ ஹீரோயினாக ஆக்ஷ்ன் அவதாரம் எடுக்கிறார்.
இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று வருகிறார். அதனால் தான் உடல் இளைத்து காணப்படுகிறார். எது எப்படியோ படத்தை பார்த்தால் “எப்படி இருந்த த்ரிஷா இப்படி ஆயிட்டாரே” என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.